ரோடாக மாறும் விளை நிலங்கள் விவசாயிகள் குமுறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோடாக மாறும் விளை நிலங்கள் விவசாயிகள் குமுறல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலுார், மேலுார் - புதுக்கோட்டை நான்கு வழிச்சாலைக்காக விவசாயநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கல் ஊன்றி வருகிறது. இதனால் விவசாயம்முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் குமுறுகின்றனர்.மேலுாரில் இருந்து 33 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பத்துார் வரை 60 மீட்டர் அகலத்தில் ரோடு அமைக்க கல் ஊன்ற ஆரம்பித்துள்ளனர். இந்த இடங்கள் பெரியாறு 12வது பிரிவு கால்வாயின் நேரடி பாசனத்தில் உள்ள விளைநிலங்கள்,கிணறு, போர்வெல் வழியாக செல்வதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.தனியாமங்கலம் விவசாயி மாதவன்: நான்கு வழிச்சாலைஅமைக்கும் பணி குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை. எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வயல் பகுதியில் அத்துமீறி நுழைந்து விவசாயத்தை அழித்து, அளவு கற்களை ஊன்றி வருகின்றனர். விவசாய நிலத்தில் ரோடு அமைப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம்பாதிக்கும். இதற்கு பதில் தற்போதுள்ள ரோட்டை அகலப்படுத்தினால் அரசுக்கு செலவும் குறையும். விவசாயிகளின்வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X