'வாக்கிங்' சென்றவரிடம் நகைபறிப்பு விரட்டிச்சென்று பிடித்த போலீசார் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வாக்கிங்' சென்றவரிடம் நகைபறிப்பு விரட்டிச்சென்று பிடித்த போலீசார்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் மூட்டா காலனி வங்கி அதிகாரி ராஜேஷ். நேற்று காலை 6:00 மணிக்கு அப்பகுதியில் 'வாக்கிங்' சென்றார். அப்போது இரு டூவீலரில் வந்த 4 பேர், கத்தியை காட்டி இரண்டரை பவுன் நகை, அலைபேசியை பறித்துச் சென்றனர்.அவ்வழியே வந்தவர்கள் போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பசுமலை செக்போஸ்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அண்ணாதுரை மற்றும் போலீசார், விரட்டிச் சென்று பசுமலை செக்போஸ்ட் அருகே வாகனத்தை ரோட்டின் குறுக்கே நிறுத்தினர். ஒரு டூவீலரில் வந்தவர்கள் தப்பினர். மற்றொரு டூவீலரில் வந்தவர்கள் சிக்கினர்.விசாரணையில் அவர்கள்ஆனையூர் இலங்கை அகதி சதீஷ்குமார்,19, சிக்கந்தர் சாவடி மனோஜ்குமார்,20, எனத்தெரிந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் நகராட்சி தலைவர் சம்பத்குமார் நேற்று மேம்பாலத்தில் 'வாக்கிங்' சென்றபோது டூவீலரில் வந்த இருவர் அலைபேசியை பறித்து தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை