கரும்புக்கு பாக்கி கோரி முற்றுகை விவசாயிகள் 40 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரும்புக்கு பாக்கி கோரி முற்றுகை விவசாயிகள் 40 பேர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, அரவை செய்த கரும்புக்குரிய பாக்கி தொகை 212 கோடி ரூபாயை வழங்க கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கரும்பு விவசாயிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன், தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் அப்பாஸ், பொருளாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கதிரேசன், ராஜேந்திரன், இளங்கோவன், சோலைமலை உட்பட பலர் பங்கேற்றனர். போலீஸ் அனுமதி மறுத்தததால் திருவள்ளுவர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.மாநில தலைவர் கூறியதாவது: அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் மட்டும் 21 கோடி ரூபாய் பாக்கியுள்ளது. மாநிலத்தில் 17 பொது மற்றும் 23 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 212 கோடி ரூபாய் பாக்கியுள்ளது. வறட்சியால் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்யாத நிலையில் பாக்கியும் கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை