மதுரையில் களைகட்டுகிறது நுங்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் களைகட்டுகிறது நுங்கு விற்பனை

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மதுரையில் களைகட்டுகிறது   நுங்கு   விற்பனை

மதுரை: மதுரையில் கோடை வெயில் உஷ்ணத்தை தணிக்க இயற்கை உணவான பனை நுங்கு விற்பனை தீவிரமாகநடக்கிறது.
மதுரை, ராமநாதபுரம் உட்பட தென் மாவட்டங்களில் 5.10 கோடி பனை மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் ஜூலை வரை நுங்கு சீசன். கோடை உஷ்ணம் தணிக்க, மக்கள் அதிகளவில் நுங்கு சாப்பிடுவர். நீர்சத்து கிடைக்கும்.சின்னம்மை வராமல் பாதுகாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். பொட்டாசியம் உட்பட பல சத்துக்கள் உண்டு. சிலர் சுவைக்காக பனை மட்டையில் இருந்தே நுங்குகளை தோண்டி எடுத்துசாப்பிடுவர்.மதுரைக்கு அழகர்கோவில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து பனை நுங்குகள்விற்பனைக்கு வருகின்றன. குருவிக்காரன் சாலை, கீழவாசல், அண்ணாநகர், புதுார், சர்வேயர் காலனி, நெல்பேட்டை சந்தை உட்பட பல்வேறு இடங்களில் தற்காலிக கடைஅமைத்து வியாபாரிகள் விற்கின்றனர். தினமும் 300 மூடைகள் (மூடைக்கு 150 நுங்கு மட்டைகள்) விற்கின்றன.


மூன்று ரக நுங்கு:

வெள்ளை, கருப்பு, பனியார காச்சி என 3 ரக நுங்கு உண்டு. வெள்ளை அதிக இனிப்பும், கருப்பில் சதை பிடிப்பு மற்றும் கடின தோல் இருக்கும். பனியார காச்சி மட்டுமே தோல் தடிப்பின்றி நீரால் சூழ்ந்து காணப்படும். வாடிக்கையாளர்களிடம் பனியார காச்சிக்கு அதிக வரவேற்பு உண்டு.


நுங்கு ஜூஸ் ஸ்பெஷல்:

சதைப்பிடிப்பிற்கு ஏற்ப ஒரு நுங்கு 5 முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நுங்குகளை மிக்ஸியில் போட்டு, ஜூஸாக எடுத்து தேவைப்படும்எசன்ஸ் சேர்த்து அருந்துகின்றனர்.

அழகர்கோவில் வியாபாரி ஜோதி கூறியதாவது: பனை மரங்களை 80 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் எடுப்போம். கடந்த ஆண்டை விட விளைச்சல் குறைவு தான். இருப்பினும் விற்பனை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஏலம் எடுத்த தொகையை எடுத்து லாபம் ஈட்ட நம்பிக்கையுள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201816:14:02 IST Report Abuse
Endrum Indian ஆமா இந்த தோலை எடுக்குறதுக்குள்ளே செம் போராக இருக்கின்றது. அதுவும் இங்கே இப்போது கிடைப்பது மிக கெட்டி தோலாக இருப்பதால் உள்ளே நுங்கு கொஞ்சம் தான் இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
18-மே-201812:48:20 IST Report Abuse
Loganathan Kuttuva பதநீர் பனை மரத்தில் இருந்து கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை