'அட்டாக்' பாண்டி ஜாமின் மனு ஒத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அட்டாக்' பாண்டி ஜாமின் மனு ஒத்திவைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தி.மு.க.,தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த 'பொட்டு' சுரேஷ் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 'அட்டாக்' பாண்டி ஆறாவது முறை தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.'பொட்டு' சுரேஷ்2013 ஜன.,31 ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த, மதுரை வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் 'அட்டாக்' பாண்டியை 2015 செப்.,21 ல் போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாண்டியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம்ஐந்துமுறை தள்ளுபடி செய்தது. பாண்டி,'மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என மீண்டும் மனு செய்தார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.மனுதாரர் வழக்கறிஞர்: மனுதாரர் 2 ஆண்டுகள் 8 மாதங்களாக சிறையில் உள்ளார். விசாரணையை கீழமை நீதிமன்றம்குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத்தரப்பில் உள்நோக்குடன் இழுத்தடிக்கின்றனர்.அரசு வழக்கறிஞர்: போலீசார் சிரமப்பட்டு மனுதாரரை கைது செய்துள்ளனர். ஜாமின்அனுமதித்தால், மீண்டும்தலைமறைவாகிவிடுவார். இவ்வாறு விவாதம் நடந்தது. விசாரணையை ஜூனிற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X