------ரூ.3 கோடியில் வண்டியூர் கண்மாய் தூர் வாரல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

------ரூ.3 கோடியில் வண்டியூர் கண்மாய் தூர் வாரல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, "வண்டியூர் கண்மாய் 3 கோடி ரூபாயில் இரண்டாவது கட்டமாக துார்வாரி ஆழப்படுத்தப்படும்," என, மத்திய நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப்பினர் ஏ.சி.காமராஜ் தெரிவித்தார்.மதுரையில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் ஏ.சி.காமராஜ் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: வண்டியூர் கண்மாய் முதற்கட்ட குடிமராமத்துப் பணி 2013 நடந்தது. இரண்டாம் கட்டமாக3 கோடி ரூபாயில் கண்மாய் துார் வாரி ஆழப்படுத்தப்படும். கே.கே.நகர், அண்ணா நகர், கோமதிபுரம், மேலமடையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதற்கான நிதி மக்கள், நிறுவனங்களிடம் திரட்டப்படவுள்ளது. மூன்றாம் கட்டமாக 200 கோடி ரூபாயில் ஆழப்படுத்தும் பணி நடக்கும், என்றார்.கண்மாய் நீர் ஆதார மேம்பாட்டு கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் ராகவன்,பாண்டி, பன்னீர்செல்வம், கே.கே.நகர்குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி பொன்னையா, நடையாளர் கழக நிர்வாகி கருப்பையா, நவீன நீர்வழிச்சாலை பேரியக்க நிர்வாகிகள் முருகப்பன், போஸ், ஸ்ரீதரன்,டாக்டர் சலீம்ராஜா, நீர்நிலை பாதுகாப்பு இயக்க தலைவர் அபுபக்கர், வைகை நதி மக்கள் இயக்க தலைவர் ராஜன், தெப்பக்குளம் நடையாளர் கழக நிர்வாகி சுப்ரமணியன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X