லோக்சபா குழுவினர் கலந்துரையாடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லோக்சபா குழுவினர் கலந்துரையாடல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மகளிர்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான லோக்சபா குழுவினர் மதுரையில் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.தலைவர் பிஜோயா தலைமையில் உறுப்பினர்கள் அஞ்சு பாலா, ரேணுகா புட்டா, ராமாதேவி, ஜோதி துாவே, பூணம்பென், ஜெயஸ்ரீபென் பட்டேல், ரித்தி பத்தக், மால ராஜ்யலட்சுமி, வனரோஜா, காகசன் பெர்வீன், சதாப்திராய், ரிட்டா தராய் மதுரை வந்தனர். பெண்களுக்காக நிறைவேற்றப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.கலெக்டர் வீரராகவ ராவ் பேசுகையில், ''பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற மாநில அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் ஒரு லட்சத்து மூவாயிரம் உறுப்பினர்களை கொண்ட 7116 சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர் சுயதொழில் புரிய கடனுதவி, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த உதவிகள் செய்யப்படுகிறது. மானியத்தில் தொழில் செய்ய கடனுதவி, திருமண நிதியுதவி, அம்மா இரு சக்கர வாகன திட்டம், பிரதமரின் முத்ரா திட்டத்தில் கடனுதவி பெண்களுக்கு வழங்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை