காவிரி விவகாரத்தில் இன்று தீர்ப்பு?மேலாண்மை ஆணையம் அமைப்பதாக உறுதி| Dinamalar

காவிரி விவகாரத்தில் இன்று தீர்ப்பு?மேலாண்மை ஆணையம் அமைப்பதாக உறுதி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது; இது குறித்த இறுதி தீர்ப்பு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள், காவிரி நீரை பகிர்ந்து கொள்வது குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, உரிய செயல் திட்டம் வகுக்கும் படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிப்., 16ல் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், வரைவு செயல் திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, மத்திய அரசின் சார்பில், அவகாசம் கோரப்பட்டது.கர்நாடக சட்டசபை தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வரைவு செயல் திட்டம், மத்திய அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில், திருத்தப்பட்ட செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இதையடுத்து, காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டில்லியில் செயல்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை, இன்று அல்லது வரும், 22, 23ம் தேதிகளில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X