கட்டுமான திட்ட அனுமதி அறிக்கை தர உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான திட்ட அனுமதி அறிக்கை தர உத்தரவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்தில், 2013 முதல், 2017 வரை வழங்கப்பட்ட கட்டுமான திட்ட அனுமதி விபரங்களை அறிக்கையாக தர, கணக்கு தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்டப்படி, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள், திட்ட அனுமதி வழங்குவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.குறிப்பாக, சட்ட விதிகளில் விலக்கு அளிப்பதாக கூறி, தகுதி இல்லாத பல திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்து உள்ளதாகவும், கட்டட பரப்பளவை முறையாக கணக்கிடாமல், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் வருவாய் ஆதாரங்கள் சரியாக உள்ளதா என, கணக்கு தணிக்கைத் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திட்ட அனுமதி தொடர்பான குளறுபடிகள் குறித்து, விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, 2013 முதல், 2017 வரையிலான காலத்தில், எந்தெந்த கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பான அறிக்கை தர, கணக்கு தணிக்கைத் துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான கோப்புகள், ஆவணங்களை அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அதிகாரிகளுக்கு, கணக்கு தணிக்கைத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், அதிகாரிகளுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை