சோதனை கடந்து சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோதனை கடந்து சாதனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்த, எடியூரப்பா, 75, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர். தென் மாநிலங்களில் பதவியேற்ற, பா.ஜ.,வின் முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர். தற்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுஉள்ளார்.எடியூரப்பாவின் அரசியல் பின்னணி:பிப்., 27, 1943: கர்நாடகாவில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே கிராமத்தில் பிறந்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்1970: ஷிகாரிபுரா பகுதியின், ஆர்.எஸ்.எஸ்., செயலராக நியமிக்கப்பட்டார்1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார்1975: ஷிகாரிபுரா நகராட்சி தலைவராக தேர்வானார்1975 - 1977: நாட்டின் நெருக்கடி நிலை இருந்த போது, சிறையில் அடைக்கப்பட்டார்1983: முதல்முறையாக, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார்1988: பா.ஜ., மாநில தலைவராக பதவியேற்பு1994: சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்நவ., 12, 2007: கர்நாடக முதல்வராக தேர்வுநவ., 19: பெரும்பான்மை இல்லாததால், முதல்வர் பதவியில் இருந்து விலகல்மே 30, 2008: சட்ட சபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை பெற்றது. எடியூரப்பா, முதல்வரானார்2010: அடுத்தடுத்து இரண்டு முறை, இவரது அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உள்ளானதுநவ., 2010: அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டதுபிப்., 5, 2011: சொத்து கணக்கை வெளியிட்டார்ஜூலை 28: சட்ட விரோதமாக, கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக, 'லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம் சாட்டியதுஜூலை 31: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்அக்., 15: கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பு2012: பா.ஜ.,வில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா பக் ஷா கட்சியை துவக்கினார்2013: சட்டசபை தேர்தலில், இவரது கட்சி ஆறு இடங்களில் வென்றது2014: பா.ஜ.,வுடன் கட்சியை இணைத்தார்2016: கர்நாடக, பா.ஜ., தலைவராக நியமனம்மே 15, 2018: சட்டசபை தேர்தலில், ஷிகரிபுரா தொகுதியில் வெற்றிமே 17: முதல்வராக பதவியேற்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை