மூன்று போலீசாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று போலீசாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட மூன்று போலீசாருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிக்கோடு புதுவிளையை சேர்ந்த மெர்லின்குமார், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த, 2011ல், என் மனைவி கொடுத்த புகாரில், என் மீதும், தாயார் மற்றும் சகோதரி மீதும், மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முன்ஜாமின் பெற்ற நாங்கள், குழித்துறை போலீசில் கையெழுத்திட்டு வந்தோம்.கையெழுத்திட சென்ற என்னை, மார்த்தாண்டம், எஸ்.ஐ.,க்கள் ஜானகி, கிருஷ்ணமூர்த்தி, கோபிநாதன் ஆகியோர் அவதுாறாக பேசி, அடித்து உதைத்தனர்.இது குறித்து, என் தாயார் மற்றும் சகோதரி கேட்டதற்கு, அவர்களை விபசார வழக்கில் கைது செய்வோம் என, மூவரும் மிரட்டினர். காவல் நிலையத்தில், குடிக்க தண்ணீர் கேட்ட போது, சிறுநீர் கொடுத்தனர். அதை குடிக்க மறுத்ததால், என் தலையில் ஊற்றினர். என் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு:சாட்சியங்கள், ஆவணங்களை பார்க்கும் போது, போலீஸ் அதிகாரிகள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு, தமிழக அரசு, ஒரு லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்.அந்த தொகையை, போலீஸ் அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, கோபிநாதன் ஆகியோரிடம் தலா, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜானகியிடம், 50 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், போலீசார் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X