பெத்திக்குப்பம் சோதனைச்சாவடி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெத்திக்குப்பம் சோதனைச்சாவடி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

Added : மே 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பத்தில், 125 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியை, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, பெத்திக்குப்பம் சோதனைச்சாவடி, நவீன வசதிகளுடன், பல்வேறு துறைகளின் அலுவலகங்களுடன், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.இது, விரைவில் திறக்கப்பட உள்ளது. மொத்தம், 125 கோடி ரூபாய் செலவில், உருவாக்கப்பட்டுள்ள, இந்த சோதனைசாவடியை, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.இது குறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பெத்திக்குப்பம் சோதனைச்சாவடியில், போக்குவரத்து, காவல், வருவாய், வணிகவரி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மதுவிலக்கு உள்ளிட்ட துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து செயல்படும்.இதனால், சட்ட விரோத பொருட்கள் கடத்தல், முறைகேடான வாகன இயக்கம், வரி ஏய்ப்பு, வனப்பொருட்கள், வன விலங்குகள் கடத்தல்தடுக்கப்படும்.அவற்றை கண்காணிக்கும் வகையில், எடை மேடை, கண்காணிப்பு கேமரா, ஸ்கேன் சென்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், அதிக வாகனங்களை நிறுத்தும் வசதி, கிடங்கு வசதி, நவீன கணினியுடன் கூடிய மின்னணு சாதன வசதிகளும் உள்ளன.இதனால், வாகன நெரிசல், வரி ஏய்ப்பு, கடத்தல், நோய்ப்பரப்பும் விலங்குகள் உள்ளிட்டவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பழைய பாசில் பயணிக்கலாம்'
பள்ளி மாணவர்களுக்கான, கோடை விடுமுறை, இம்மாதம் முடியும் நிலையில், ஜூன் முதல் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், ''மாணவர்களுக்கான, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி, மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்,விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
18-மே-201817:18:15 IST Report Abuse
JANANI பொதுமக்கள் சீரான சாலை பயணம் மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X