'டாஸ்மாக்' பாரில் கொலை மடிப்பாக்கத்தில் ஐவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' பாரில் கொலை மடிப்பாக்கத்தில் ஐவர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மடிப்பாக்கம், கஞ்சா வியாபாரம் செய்வது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக, ஆட்டோ ஓட்டுனரை, 'டாஸ்மாக்' பாரில், பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த, கஞ்சா வியாபாரி உட்பட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திரிசூலம், இலும்பை தோப்பு தெருவைச் சேர்ந்தவர், சுரேஷ், 23; ஆட்டோ ஓட்டுனர். கடந்த, 15ம் தேதி இரவு, மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், மது அருந்தினார். அவருக்கு அருகே, ஐந்து பேர் கொண்ட கும்பல் மது அருந்தினர்.திடீரென, 5 பேர் கொண்ட கும்பல், பீர் பாட்டில், இரும்பு கம்பியால், சுரேஷை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். பலத்த காயத்துடன், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷ், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பலியானார்.மடிப்பாக்கம் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, மூவரசம்பட்டு, கிருஷ்ணாநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன், 27, திலிப், 23, பல்லாவரத்தைச் சேர்ந்த சுடலைராஜா, 26, கலைமணி, 23, அஜித்குமார், 24 ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:ராமச்சந்திரன், கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். இது குறித்து, சுரேஷ், போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக, எதிர் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில், ராமச்சந்திரன், கூலிப்படையுடன் சேர்ந்து, சுரேஷை கொலை செய்து உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். போலீசார் ஐந்து பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை