கோடை கால சுற்றுலா திட்டம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை கால சுற்றுலா திட்டம் அறிவிப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், கோடை கால, மூன்று நாள் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.கோடைக்காலத்தில், பொதுமக்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான சுற்றுலா மேற்கொள்ளும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டுகள், கோடைகால சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.அவ்வகையில் தென் மாநிலங்களில் உள்ள, பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் புறப்பட்டு, திங்கள்கிழமை காலையில், சென்னை திரும்பும் வகையில், மூன்று நாள் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தின் படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒக்கனேக்கல், குற்றாலம், மைசூரு, பெங்களூரு, மூணார் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.சுற்றுலா பயணியர் வசதிக்காக, சாதாரண, குளிர்சாதன பேருந்துகள், தங்கும் அறைகள் உள்ளன. சுற்றுலா இடத்திற்கு ஏற்ப, 3,900 ரூபாய் முதல் 5,800 வரை வசூலிக்கப்படுகிறது. சிறார்களுக்கு கட்டணத்தில் சலுகை உள்ளது.மேலும் தகவல்களுக்கு, 044- 2533 3333, 044- 2533 3444 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X