குந்தா நீரேற்று மின் நிலையம் திட்ட பணிகள் இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குந்தா நீரேற்று மின் நிலையம் திட்ட பணிகள் இன்று துவக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நீலகிரி மாவட்டத்தில், குந்தா நீரேற்று மின் நிலையத்தின் கட்டுமான பணிகளை, முதல்வர் பழனிசாமி, இன்று துவக்கி வைக்கிறார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி மலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 7,850 அடி உயரத்தில், மின் வாரியத்திற்கு, குந்தா நீர் மின் உற்பத்தி வட்டம் உள்ளது. இங்கு, 834 மெகாவாட் திறனில், 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அங்குள்ள, அவலாஞ்சி, எமரால்டு, முக்கூர்தி உள்ளிட்ட அணைகளில், தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.அவலாஞ்சி, எமரால்டு அணைகளுக்கு அருகில், தலா, 125 மெகாவாட் திறனில், 4 அலகுகள் உடைய, நீரேற்று மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. இது, அடர்ந்த வன பகுதியில் அமைவதால், உபகரணங்களை எடுத்து செல்ல, 40 கோடி ரூபாய் செலவில், 1 கி.மீ.,க்கு சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் நிலையத் தின் கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. அவற்றை, இன்று முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:குந்தா வட்ட நீர் மின் நிலையங்களில், அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, ஒரு முறை மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படும். புதிதாக கட்டப்பட உள்ள குந்தா நீரேற்று மின் நிலையத்தில், ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை மீண்டும், 'மோட்டார் பம்ப்' வாயிலாக, அணைகளுக்கு எடுத்து சென்று, தேவைக்கு ஏற்ப, மின் உற்பத்தி செய்யலாம்.ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகளையும் துவக்கி வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

நீண்ட தாமதம்குந்தா நீரேற்று மின் திட்ட அறிவிப்பு, 2012ல் வெளியிடப்பட்டது. திட்ட செலவு, 1,831 கோடி ரூபாய். அங்கு, 2019ல், மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது தான், கட்டுமான பணிகளே துவங்க உள்ளன. - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை