அரபிக்கடலில், 'சாகர்' புயல் ஆனா நமக்கு பாதிப்பில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரபிக்கடலில், 'சாகர்' புயல் ஆனா நமக்கு பாதிப்பில்லை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

'அரபிக்கடலில் உருவாகியுள்ள, 'சாகர்' புயல், ஏமன் நாட்டிற்கு நகர்ந்துள்ளதால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை; அதே நேரம், தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், பல இடங்களில் மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு, கோடை கால துவக்கம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அக்னி வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது.இந்நிலையில், அரபிக்கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, நேற்று அதிகாலை, புயலாக மாறியது.இந்த புயலுக்கு இந்தியா தேர்வு செய்த, 'சாகர்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.சாகர் என்பது, கடல் என்ற பொருள்படும். இந்த புயல், இந்தியாவுக்கு மேற்கு பகுதியில் நகர்ந்து, ஏமன், சோமாலியா இடையே, ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது.'இந்த புயல், தமிழகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆயினும், தமிழக மீனவர்கள், அரபிக்கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கடல் கொந்தளிப்பாக காணப்படும்' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.இதற்கிடையில், வங்க கடல், இந்திய பெருங்கடலுக்கு இடையில், இலங்கை அருகே, வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் முதல், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை, மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய பகுதிகள், மேற்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, சாத்துாரில், அதிகபட்சம், 5 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.தர்மபுரி, வாழப்பாடி, ஆண்டிப்பட்டி, 4; ஊட்டி, கழுகுமலை, 3; பேச்சிப்பாறை, திருச்சுழி, சிவகாசி, கோவை, சத்திரப்பட்டியில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை