கோவை- - சத்தி ரோடு நான்கு வழிச்சாலையாகுமா ? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை- - சத்தி ரோடு நான்கு வழிச்சாலையாகுமா ?

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அன்னுார்:கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக தரமுயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் (என்.எச்.209)ஒரு பகுதி கோவை- சத்தி சாலை. இந்த வழித்தடம் 68 கி.மீ.,தொலைவு கொண்டது. காந்திபுரம் முதல் சரவணம்பட்டி வரைமாநகராட்சி எல்லை உள்ளது.அதன்பின், கோவைமாவட்டத்தில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் ஒன்றியங்களும்,ஈரோடு மாவட்டத்தில் புளியம்பட்டி, சத்தி நகராட்சிகள்,பவானிசாகர் ஒன்றியம் இந்த சாலையின் எல்லையில் உள்ளன.கோவையிலிருந்து, அன்னுார், சத்தி, பண்ணாரி, தாளவாடிஆகிய ஊர்களுக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தசாம்ராஜ்நகரம், மைசூரூ, கொள்ளேகாலுக்கும்,செல்ல இந்த வழித்தடம் பிரதானமானது. கர்நாடகா மாநிலத்தில் அனைத்து வகையாக காய்கறிகளும் இந்த வழித்தடத்தில் கோவைக்கு வருகிறது. அதேபோல், கோவையிலிருந்து பம்ப், வெட் கிரைண்டர், பவுண்டரிகாஸ்டிங்குகள் என ஏராளமான பொருட்கள் இந்தவழித்தடத்தில், மைசூர், மாண்டியா கொண்டுசெல்லப்படுகின்றன.இருமாநிலங்களுக்கு முக்கியமான இப்பாதைமேம்படுத்தப்படாமல் உள்ளது. இந்த பாதை 21 அடி அகலம்மட்டுமே உள்ளது. பல இடங்களில் வளைவுகளுடன்,குறுகலாகவும், தரமான சாலை இல்லாமலும் உள்ளது.இதனால், அன்னுார், கோவில்பாளையம், சரவணம்பட்டிஆகிய மூன்று ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், இரண்டு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது. வாரத்திற்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்.அன்னுார் மக்கள் கூறியதாவது:கோவை, சரவணம்பட்டியில் துவங்கி, அன்னுார் வரும் வழியில், குரும்பபாளையத்தில், இரு இடங்களில் குறுகிய வளைவுகள் உள்ளன. கோவில்பாளையத்தில் எக்சேஞ்ச் ஸ்டாப்பிலும், குன்னத்துாரில் இரண்டு இடங்களிலும், கரியாம்பாளையம், நால்ரோடு சந்திப்பிலும், குறுகிய வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளுக்குள் நுழையும் வரை எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.மேலும், குன்னத்துார் மற்றும் கோவில்பாளையத்தில்,மரக்கிளைகள், வாகனங்களை மறைத்து விபத்துஏற்படுத்துகின்றன. கோவை -சத்தி தேசிய நெடுஞ்சாலையைநான்கு வழிச்சாலையாக தரமுயர்த்தினால் மட்டும் இதற்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை