குளத்துக்குள் குப்பை கொட்டுவது தடுத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளத்துக்குள் குப்பை கொட்டுவது தடுத்து நிறுத்தம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:'தினமலர்' செய்தியால், மண்ணரை குளத்தில் குப்பை கொட்ட அமைக்கப்பட்ட வழித்தடத்தை பொதுப்பணித்துறையினர் அடைத்து, கரையை பலப்படுத்தினர்.திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே, அணைக்காடு தடுப்பணையிலிருந்து, மண்ணரை குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. சுற்றுப்புறத்திலுள்ள, குடியிருப்புகள், கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக உள்ள, 4.5 கி.மீ., துாரம் வழங்கு வாய்க்கால், ஆக்கிரமிப்புகளாலும், குப்பை, சாக்கடை கழிவுகள் கலக்கும் மையமாக மாறி, புதர் மண்டியது.அதே போல், குளத்தின் நீர் வழித்தடத்தை மறித்து, தனியார் நிறுவனம் மண் ரோடு அமைத்துள்ளதோடு, சாய ஆலை திட கழிவுகள் கொட்டியும், குப்பைகள், கட்டட கழிவுகள் கொட்டி குளத்தை மூடி வருவதாக 'தினமலர்' நாளிதழில், கடந்த, 15ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.இதனால், நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுபாஷினி மற்றும் அதிகாரிகள், குளத்தை ஆக்கிரமித்து ஏற்படுத்தப்பட்டிருந்த வழித்தடத்தை அடைத்த னர். மேலும், ஊத்துக்குளி ரோடு பகுதியிலுள்ள கரையை பலப்படுத்தினர். இப்பணியில், 'வேர்கள்' அமைப்பினரும் பங்கேற்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'குளத்தை, தனியார் ஆக்கிரமித்து வருகின்றனர். குளத்தை மூடினால், எளிதாக தங்கள் நிறுவனத்திற்கு செல்ல முடியும் என்பதற்காக, வாய்க்காலை உடைத்து விடுவது, சாய கழிவு நீரை கலந்து விடுவது, குளத்தில் நேரடியாக குப்பை கொட்டுவது என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேல் கரையில் எங்கும் வழித்தடம் அமைக்காமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், ஊத்துக்குளி ரோட்டில், பாதுகாப்புக்காக நெடுஞ்சாலைத் துறையால், 200 மீட்டர் துாரம் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பகுதியிலும், பாதுகாப்பு வேலி அமைத்தால், வாகன விபத்துகள் ஏற்படாமலும், குளத்துக்கும் பாதுகாப்பாக இருக்கும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை