'வெற்றிக்கும் தோல்விக்கும் வெகு தூரமில்லை'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வெற்றிக்கும் தோல்விக்கும் வெகு தூரமில்லை'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:வெற்றிக்கும், தோல்விக்கும் பெரிய வித்தியாசம் இல்லை; உழைப்பு, துணிச்சல், நேர்மை இருந்தால் சாதிக்கலாம், என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூரில், பொதிகை மனித வள மேம்பாட்டு மையம், நிப்ட்-டீ கல்லுாரி மற்றும் கேப்சூல் இன்டஸ் பவுன்டேசன் சார்பில், 'திசை காட்டும் திருப்பூர்' என்ற தலைப்பில், திறனாய்வு கருத்தரங்கம்,நடந்தது.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார். 'சைமா' தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் கவிதா பேசியதாவது:வாழ்வில் திரும்பி பார்க்காதவர்கள், திசை தெரியாமல் திணற வேண்டும். வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். திருப்பூரில் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் ஒற்றுமையாக இணைந்து உழைப்பதால், மக்களுக்கு வாழ்வின் திசை காட்டும் ஊராக உள்ளது. படித்தவர், படிக்காதவர் அனைவரும் ஜெயிக்கும் தொழிலாக பின்னலாடை துறை உள்ளது. உழைப்பு, நேர்மை, துணிச்சல் இருந்தால், எளிமையான வெற்றியை பெற முடியும் என்பதை தொழிலதிபர்கள் உணர்த்தியுள்ளனர். ஒரே நேரத்தில், அனைத்து விஷயங்களையும் செயல்படுத்தி, அனைவர் மனதையும் திருப்திபடுத்தும் தொழிலதிபர்கள் வாழ்கின்றனர்.நிலவில் கால்வைக்க சென்ற, ஆல்டின் ஒரு நிமிடம் தயங்கியதால், உடன் சென்ற ஆர்ம்ஸ்ட்ராங் வரலாற்றில் இடம் பிடித்தார். உலக அளவில் ஓட்டப்பந்தயங்களில் வெற்றி, மைக்ரோ செகண்ட்களில் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்யாசம் இல்லை; உழைப்பு, துணிச்சல், நேர்மை இருந்தால், எந்த துறையிலும் சாதிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர்கள், சிவஞானம், ராசு, சுந்தரேசன், எழுத்தாளர் ஆதலையூர் சூர்யகுமார், நாகராஜன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை