ஆசிரியர் பற்றாக்குறை தேர்ச்சி சதவீதம் சரிந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பற்றாக்குறை தேர்ச்சி சதவீதம் சரிந்தது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்:வரலாறு பாடத்துக்கு போதிய ஆசிரியர் இல்லாததே, அப்பாடத்தில் அதிகமானோர் தோல்விடைய காரணமாக அமைந்துள்ளது.நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவில், மாவட்டத்தில் அதிக மாணவர்கள் வரலாறு பாடத்தில் தோல்விடையந்துள்ளனர். 2,101 பேர் தேர்வெழுதியதில், 1,928 பேர் தேர்ச்சி பெற்றனர். 173 பேர் தேர்ச்சி பெறவில்லை. வரலாறு பாடத்தின் தேர்ச்சி, 91.77 சதவீதம். இது கடந்த ஆண்டை விட, 3.53 சதவீதம் குறைவு.மாவட்டத்தில், 60 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஏழு மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. மொத்த பள்ளிகளுக்கும் சேர்த்து, 40க்கும் குறைவான வரலாறு ஆசிரியர்களே உள்ளனர். 100க்கும் அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கூட, அனுபவமிக்க ஆசிரியர் இல்லாமல், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர் பணியமர்த்துகின்றனர். அறிவியல், கணிதம் உள்ளிட்டவற்றை 'சீனியர்' ஆசிரியர்கள் கற்பிக்கும் விதமும், புதியவர்கள் பாடம் கற்பிக்கும் விதமும் மாறுபடுகிறது. புறநகரில் வரலாறு பாடம் கற்பிக்க போதிய ஆசிரியர் இல்லாததால், இத்தேர்வுக்கு மாணவர்கள் முறையாக தயாராகவில்லை. தங்களாக படித்து தெரிந்ததை எழுதியதால், தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது.இது குறித்து வரலாறு பாட ஆசிரியை ஒருவர், 'அறிவியல் பாடங்களுடன் ஒப்பிடுகையில் சக ஆசிரியர்களே வரலாறு தானே, மாணவர்கள் 'கதை' எழுதி பாஸ் செய்து விடுவர் என்ற போக்கு உள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு, வரலாறு, நிகழ்வுகளில் ஆண்டுகள் குறித்த கேள்விகளே தற்போது அதிகமாக இடம் பெறுகிறது. 'இதற்கேற்பவே தேர்வுத்தாள் மதிப்பீடும் உள்ளது. வரும் காலங்களிலாவது வரலாறு பாடத்துக்கு கூடுதல் ஆசிரியர் நியமித்து, முக்கியத்துவம் வழங்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X