அவிநாசியில் புதியஇ-சேவை மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் புதியஇ-சேவை மையம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அவிநாசி;அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், அஞ்சல் நிலைய வீதி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், அரசு பொது இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.இதில், வருவாய்த்துறை சான்றுகளான, ஜாதி சான்று, இருப்பிட, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று உட்பட, அதுசார்ந்த அனைத்து வகையான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வருவாய் துறை சான்றுகள் அனைத்தும், அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன; பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மையம் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில், 100க்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களை வாங்கி, பயனடைந்துள்ளனர். மேற்கொண்டு, விவரம் தேவைப்படுவோர், 04296-270202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றனர். துள்ளியோடிய புள்ளி மான்வாகனத்தில் அடிபட்டு பலிஅவிநாசி, மே 18-அவிநாசி அருகே திருப்பூர் ரோட்டில், ரோட்டை கடந்த மான், வாகனத்தில் அடிபட்டு இறந்தது.அவிநாசி அருகே தெக்கலுார், வண்ணாற்றங்கரை, புதுப்பாளையம் குளம், கோதபாளையத்தில், 500க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. நீர், உணவு தேடி வெளியேறும் மான்கள், வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும், கிணற்றில் விழுந்தும் உயிரிழப்பை சந்திக்கின்றன. இவ்வாறு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே, 50க்கும் மேற்பட்ட மான்கள் பரிதாபமாக பலியாகின.திருப்பூர் ரோட்டில், நேற்று காலை மான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதியினர், மான் இறந்து கிடப்பது குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், பல மணி நேரமாகியும், வனத்துறையினர் யாரும் வரவில்லை.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'அவிநாசி பகுதியில் வசிக்கும் மான்கள், அடிக்கடி இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதேயில்லை. அதேபோல், மான்கள் இறந்த தகவல் கிடைத்தாலும் கூட, பல மணி நேரம் தாமதமாக வந்த, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கின்றனர். 'வன விலங்குகள் மீது மக்கள் காட்டும் ஆர்வத்துக்கு மதிப்பளித்து, சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை