தொடருமா தொலைதூர கல்வி மையங்கள்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடருமா தொலைதூர கல்வி மையங்கள்?

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


கடும் எதிர்ப்பு காரணமாக, மூடப்படவுள்ள தொலைதுார கல்வி மையங்களை, சுயநிதி கல்லுாரிகளில் நடத்துவதற்கு பாரதியார் பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது; இது தொடர்பாக, உயர் கல்வித்துறை செயலர் பங்கேற்கும் முக்கிய கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது.கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், அதன் எல்லையான கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை தாண்டி, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் 500க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்கள் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), சி.பி.பி., (Centre for Participatory Programme) போன்ற பெயர்களில், இவை நடத்தப்படுகின்றன.கட்டிடம், முறையான வகுப்பு எதுவுமின்றி நடத்தப்படும் இந்த மையங்களில், பல லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பெயரளவில் தேர்வை நடத்தி, இவர்களுக்கும் பல்கலை பெயரிலேயே பட்டங்கள் தரப்படுகின்றன. இந்த பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு, பல்கலை மானியக்குழுவின் தொலைதுார கல்வி இயக்குனரகமும் அனுமதிக்கவில்லை.எனவே, இவற்றை மூட வேண்டுமென்று, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான விசாரணையில், பாரதியார் பல்கலையின் பல்வேறு விதிமீறல்களும் வெளிச்சத்துக்கு வந்தன. எதிர்ப்பு வலுத்தது; ஆனால், மையங்களை மூட பல்கலை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை.இந்த மையங்களால், பல்கலை மட்டுமின்றி, தனிநபர்கள் பலரும் பெரும் பலன் அடைந்ததே, இதற்குக் காரணம். துணை வேந்தர், பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் இதில் 'பங்கு' போவதாக புகார் எழுந்தது. சுயநிதி கல்லுாரிகள் சங்கத்தினர், தொடர் போராட்டங்களை நடத்தினர்; ஆனால், மையங்கள் மூடப்படவில்லை. துணைவேந்தராக இருந்த கணபதி கைதுக்குப் பின், சில மாற்றங்கள் ஏற்பட்டன; இந்த மையங்களை மூடலாம் என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.ஆனால், இவற்றால் பல்கலைக்கு கிடைக்கும் 66 கோடி ரூபாய் வருடாந்திர வருவாய் பாதிக்கப்படுமென்று, எதிர்ப்பும் எழுந்தது. இதனால், மாற்று திட்டத்தை துணைவேந்தர் குழு, முன் வைக்கவுள்ளது. அதாவது, பல்கலை இணைப்புக் கல்லுாரிகளில், இந்த மையங்களை நடத்துவதற்கு ஒப்பந்தம் போடத் தயாராகியுள்ளது. 'ஆன்லைன்' முறையில் இதற்கான சேர்க்கையை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, இன்று மாலை 4:00 மணிக்கு, பாரதியார் பல்கலையில், முக்கிய கூட்டம் நடக்கவுள்ளது. தமிழக உயர் கல்வித்துறையின் செயலர் சுனில் பாலிவால் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு, சுயநிதி கல்லுாரிகளின் முதல்வர்கள் மற்றும் செயலர்களுக்கு, பதிவாளர் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதை சுயநிதி கல்லுாரிகள் சங்கம் ஏற்பதாகத் தெரியவில்லை. எனவே, இன்று மாலை கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட வாய்ப்புள்ளது.-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை