எருமாடு பகுதியில் மரக்கடத்தல்: கண்டு கொள்ள யாருமில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எருமாடு பகுதியில் மரக்கடத்தல்: கண்டு கொள்ள யாருமில்லை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்:'பந்தலுார் அருகே, எருமாடு ஸ்கூல் சந்திப்பு பகுதியில், தனியார் தோட்டங்களில் மரங்கள் வெட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே எருமாடு ஸ்கூல் சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் பல்வகை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களை இப்பகுதியில் உள்ள மரக்கடத்தல் கும்பல், சில அதிகாரிகள் துணையுடன் வெட்டி, கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்லும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.இரவில் மட்டுமின்றி பகல் நேரத்திலேயே பகிரங்கமாக மரங்கள் வெட்டி கடத்துவது குறித்து இப்பகுதியினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மரக்கடத்தலை தடுக்கவும் முன் வரவேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை