எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே, மேங்கோரேஞ்ச் எஸ்டேட்டை ஒட்டிய பகுதியில் வனப்பகுதி மற்றும் பந்தலுார்-கோழிக்கோடு நெடுஞ்சாலையும் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள வனத்தில் கடந்த நான்கு நாட்களாக இரண்டு குட்டிகளுடன் கூடிய, 11 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டது.நேற்று முன்தினம் இரவு இந்த யானைகள், ஏலமன்னா ரேஷன் கடை முன்பாக சென்று, சாலையோரத்தில் இருந்த பலா மரங்களில் உள்ள காய்களை பறித்து உட்கொண்டதுடன், அந்த வழியாக வந்த வாகனங்களையும் துரத்தியுள்ளன. பின்னர் நள்ளிரவு, 1:00 மணிக்கு வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று யானைகளை அருகிலுள்ள வனத்திற்குள் விரட்டினர்.தொடர்ந்து, நேற்று காலை எஸ்டேட்டை ஒட்டிய வனத்தில் படுத்து ஓய்வெடுத்ததுடன், அதில் ஒரு ஆண் யானை, சாலையில் செல்லும் வாகனங்களை துரத்தும் வகையில் ஓடியுள்ளது. இது குறித்து தகவலறிந்த சேரம்பாடி வனக்காப்பாளர்கள் ஜெயக்குமார், லுாயிஸ் தலைமையில் யானை கண்காணிப்பு குழுவை சேர்ந்த அசி, கிரிமாறன், ரமேஷ், , சக்திவேல், நித்யானந்தம், லோகு, கார்த்திக் ஆகியோர் தேயிலை தோட்டத்தை ஒட்டிய புதருக்கு சென்று, பட்டாசு வெடித்து யானைகளை அருகிலுள்ள தேயிலை தோட்டம் வழியாக விரட்டினர். யானைகள் நெடுஞ்சாலையை கடந்து வனத்திற்குள் சென்றதால், சுமார் அரை மணி நேரம் தமிழக-கேரளா போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில், வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோர புதரில் உள்ள யானைகள், எப்போது வேண்டுமானாலும் சாலையை கடந்து மேல்பகுதிக்கு செல்லும் என்பதால், டிரைவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை