கல்வி அலுவலகத்திற்குள் காட்டுப்பன்றி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்வி அலுவலகத்திற்குள் காட்டுப்பன்றி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்:குன்னுார் அருகே, பழைய உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த காட்டு பன்றியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குன்னுார் அருகே ஐயப்பன் கோவில் அருகே 'ஏர்வுட்' குடியிருப்பு பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகம், வன அலுவலகம், காவல்துறை கண்காணிப்பு அறை, மருத்துவமனை சுகாதார மையம் போன்றவை உள்ளன.இந்நிலையில், இங்குள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்குள் பயங்கர சப்தம் கேட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது, அலுவலகத்திற்குள் காட்டுப்பன்றி இருந்துள்ளது. தொடர்ந்து வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று கதவை திறந்துவிட்டனர். உடனடியாக அங்கிருந்து அருகில் இருந்த முட்புதருக்குள் சென்றது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை