அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகாலம் என்பதால், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.இதே போல், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மாள் கோவிலில், திரளான பெண்கள், குடும்பத்துடன் வந்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை