கோவில்களில் சிறப்பு பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் சிறப்பு பூஜை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை : வியாழக்கிழமையை ஒட்டி, சாய்பாபா கோவில்களில் நேற்று, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் தரிசித்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சாய்பாபா கோவில். இந்த கோவிலில், நித்ய பூஜைகளுடன், வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.சுந்தரராஜபுரம், மோசூர், சந்திரவிலாசபுரம் மற்றும் அம்மையார்குப்பத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதே போல், பத்மாபரம், சாய்பாபா கோவிலிலும், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை