தாம்பூல தேங்காய் விற்பனை அமோகம்; தென்னந்தோப்பு உரிமையாளர்கள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பூல தேங்காய் விற்பனை அமோகம்; தென்னந்தோப்பு உரிமையாளர்கள் மகிழ்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை : கொற்றலை கரையோர கிராமங்களில் தற்போது திருமண தாம்பூலத்திற்கான தேங்காய் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விலையும் உச்சத்தில் உள்ளதால், தென்னந்தோப்பு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பள்ளிப்பட்டில் உருவாகும் கொற்றலை ஆறு, படுதலம், ராமச்சந்திராபுரம், ஈச்சம்பாடி, சாமந்தவாடா, கரிம்பேடு உள்ளிட்ட கிராமங்களை கடந்து செல்கிறது. இதன் பாதையில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர்வளத்தை கொழிக்க வைக்கிறது.கொற்றலையின் நீர்வளத்தால், இந்த பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. கண்ணுக்கெட்டிய துாரம் வரை தென்னந்தோப்புகளின் பசுமையும், குளுமையும் காட்சிக்கு இதமாக உள்ளது.இந்நிலையில், திருமண வைபவங்களில், தாம்பூல பைகளையும் இந்த கிராமங்களில் காய்க்கும் தேங்காய்கள் இடம்பெற்று வருகின்றன.இளநீருக்கு பெயர் பெற்ற பொள்ளாச்சியை போல், பள்ளிப்பட்டு அடுத்துள்ள இந்த கிராமங்கள், தாம்பூல தேங்காய்க்கு பெயர் பெற்று வருகின்றன.ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கும் தென்னை மரங்களில், தற்போது, முதற்கட்ட காய் பறிப்பு நடந்து வருகிறது.இந்த காய்களில், 50 சதவீத மட்டைகளை மட்டும் உரித்து, தாம்பூலத்திற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்துவதில், தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.வைகாசியில் திருமண முகூர்த்தங்கள் துவங்க உள்ள நிலையில், அதற்கான தேங்காய்களை வாங்கிச் செல்வதில், மொத்த விற்பனையாளர்கள் தீவிரமாக உள்ளனர். கடந்த ஆண்டு, ஒரு தேங்காய், 10 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒரு தேங்காய், 14 - 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கூடுதல் விலை கிடைப்பதால், தென்னந்தோப்பு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை