ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உளுந்தை : கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ள, சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தில், ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.ஓராசிரியர் பள்ளி நிறுவனர் வேதாந்தம்ஜி தலைமை வகித்தார். ஆன்மிக சொற்பொழிவாளர் ரமணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எப்படி; பள்ளியை சுகாதாரமாக வைப்பது என, பல்வேறு பணிகள் குறித்து, பயிற்சி முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாணவர்களை வழிநடத்துவது தொடர்பாக, ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு கையேடுகளும் வழங்கப்பட்டன. இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை