571 மனுக்களுக்கு ஜமாபந்தியில் தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

571 மனுக்களுக்கு ஜமாபந்தியில் தீர்வு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிப்பட்டு : வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மொத்தம், 571 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது; 1,357 மனுக்கள் மீது, விசாரணை நடக்கிறது.பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், ஜமாபந்தியின் நிறைவு நாளான நேற்று முன்தினம், மொத்தம் பெறப்பட்ட, 2,252 மனுக்களில், 571 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி சான்றிதழ்களை வழங்கினார். 324 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,357 மனுக்கள் மீது, தொடர் விசாரணை நடந்து வருகிறது.நிகழ்ச்சிக்கு முன்னதாக, வெளிகரம் காலனியைச் சேர்ந்த வினோ என்ற வாலிபர், தன் தாத்தா பெயரில் உள்ள பட்டாவை பெயர் மாற்றம் செய்ய பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்ட அவரை, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X