பொன்னேரி கிளை நூலக கட்டடம் சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொன்னேரி கிளை நூலக கட்டடம் சேதம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொன்னேரி : பொன்னேரி கிளை நுாலக கட்டடம், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து வருவதால், வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பொன்னேரி கிளை நுாலகத்தில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 15 உறுப்பினர்களும் உள்ளனர். தினமும், 200க்கும் மேற்பட்ட வாசகர்கள், நுாலகத்திற்கு வந்து, படித்து செல்கின்றனர்.கீழ்தளத்தில் கதை, கட்டுரை, தினசரிகள், வார மற்றும் மாத இதழ்கள் உள்ளன. முதல் தளத்தில் கணினி மையம், அரசு பணி தேர்வாளர்களுக்கான புத்தகங்கள், படிப்பகம் ஆகியவை உள்ளன.அரசுப் பணி தேர்வுகளுக்காக, ஏராளமான இளைஞர்கள், பொதுஅறிவு புத்தகங்களை படித்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட கட்டடம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கின்றன.முதல் தளத்தில், தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் பெயர்ந்துள்ளன. மாடிப்படிகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. ஜன்னல் மற்றும் கழிப்பறை பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. கழிப்பறைகளும் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.கிளை நுாலக கட்டடம் சேதம் அடைந்து வருவதால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் அசம்பாவிதங்களை எண்ணி அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட நுாலக கட்டடத்தை முழுமையாக சீரமைத்து, வாசகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூடுதல் கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை