மின்பாதையை மாற்ற கோரி கையெழுத்து வேட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்பாதையை மாற்ற கோரி கையெழுத்து வேட்டை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பொன்னேரி : குடியிருப்புகள் மீது செல்லும் உயர் அழுத்த மின்பாதையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.பொன்னேரி துணை மின் நிலையத்திற்கு, மீஞ்சூர் அடுத்த மேலுார் துணை மின் நிலையத்தில் இருந்து, 33 கி.வாட் திறன் உடைய, உயர் அழுத்த மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.இந்த மின்பாதை, பொன்னேரி திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள சாய்நகர், அண்ணா தெரு, என்.எஸ்.சி.,போஸ் தெரு, பாரதி தெரு, கம்பர் தெரு என, 20க்கும் மேற்பட்ட தெருகள் வழியாக, 80க்கும் அதிகமான குடியிருப்புகள் மீது செல்கிறது.குடியிருப்புகள் மீது உயர் அழுத்த மின்சாரம் செல்வதால், மக்கள் அவ்வப்போது மின்விபத்துக்களில் சிக்குகின்றனர். கடந்த, 10ம் தேதி, கஜலட்சுமி, 60, என்பவர், முருங்கைக்காய் பறிக்கும்போது, மேற்கண்ட உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தார்.இதனால், குடியிருப்புகள் மீது செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி கொண்டு செல்ல வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.இந்நிலையில், மேற்கண்ட மின்பாதையை மாற்றக்கோரி, திருவேங்கிடபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கும் வகையில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.மனுவில், 'மேற்கண்ட மின்பாதை அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகள் ஆன நிலையில், மின்கம்பங்கள், மின்ஒயர்கள் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் உடைந்தும், அறுந்தும் விழும் நிலையில் உள்ளதால் அச்சத்துடன் வசிக்கிறோம்.'பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட மின்பாதையை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை