ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை : வெலமகண்டிகை வீரஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர்.ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலுார்பேட்டை அருகே உள்ளது, வெலமகண்டிகை கிராமம். இங்கு, 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, வியாச மகிரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது.கடந்த, 10ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, சுவாமிக்கு அபிஷேகம், 10:00 மணி முதல், 11:00 மணி வரை சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை ஹரிகதை நடைபெறும். விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், வெலமகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து தீமிதித்தனர். உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை