சிலிண்டர் தீப்பற்றி பெண் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலிண்டர் தீப்பற்றி பெண் படுகாயம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை : சமையல் செய்த போது, காஸ் சிலிண்டரில் தீப்பற்றியதில், பெண் படுகாயமடைந்தார்.ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் சாலை, மேற்கு காவாங்கரையில் வசிப்பவர் விஜயா. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் தீப்பற்றியது. அதிர்ச்சி அடைந்த விஜயா, வீட்டில் இருந்த துணியால், தீயை அணைக்க முயன்று, பலத்த தீக்காயமடைந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு, ஊத்துக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த தேர்வாய் தீயணைப்பு நிலைய வீரர்கள், எரிந்த சிலிண்டரை அணைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை