குளத்தில் ஆண் சடலம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் கிழக்கு பகுதியில், வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே அமைந்துள்ளது பெரிய குளம். எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும் இந்த குளத்தை, பொதுமக்கள் சலவைத்துறையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளக்கரையில், மது பிரியர்கள் நடமாட்டம், எப்போதும் காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம், பெரிய குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பாக, தகவல் பரவியது. இதையடுத்து, குளக்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர், அதே கிராமத்தை சேர்ந்த அல்லா பக் ஷி, 35, என, தெரியவந்தது. மூன்று அடி ஆழம் மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ள குளத்தில், 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மது போதையில் தண்ணீரில் மூழ்கினாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X