மணல் குவாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை, ஆரணி ஆற்றில், அனுமதிக்கப்பட்ட அரசு மணல் குவாரியை ரத்து செய்ய வேண்டும் என, தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊத்துக்கோட்டை, கிராம நிர்வாக அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வேணு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று, பேசியதாவது: ஆரணி ஆற்றில் மணல் எடுத்தால், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.எனவே, மணல் குவாரியை ரத்து செய்யாவிடில், தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயலாளர் அப்துல்ரஷித் உட்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை