திருத்தணி பிரசாத கடை ஏலம்; 2வது முறையாக ஒத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி பிரசாத கடை ஏலம்; 2வது முறையாக ஒத்திவைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருத்தணி : முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி மற்றும் பிரசாத கடை ஏலம் எடுப்பதற்கு, நேற்று யாரும் முன்வராததால், 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி, மலைக்கோவிலில் உள்ள பிரசாத கடை, உப்பு, மிளகு கடை, வில்வம், தும்பை பூ, மலர்மாலை மற்றும் அர்ச்சனை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட, 12 கடைகள் மலைக்கோவிலில் உள்ளன. இதில், தலைமுடி காணிக்கை மற்றும் பிரசாத கடைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, கோவில் நிர்வாகத்தால் பொதுஏலம் விடப்படுகிறது. அந்த வகையில், மேற்கண்ட வகை இனங்களுக்கு, நடப்பாண்டிற்கான ஏலம், கோவில் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம், 16ம் தேதி நடந்தது. ஏலம் எடுக்க, யாரும் முன்வராததால் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், கோவில் தலைமை அலுவலகத்தில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, வேலுார் இணை ஆணையர் அசோக்குமார், திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், நேற்று ஏலம் நடந்தது. முறையாக, ஏலம் தேதி அறிவிப்பு, அலுவலக பலகையிலும், நாளிதழிலும் விளம்பரம் செய்யப்பட்டது. காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடந்த ஏலத்தில் தலைமுடி, பிரசாத கடையை எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால், இரண்டாவது முறையாக, பிரசாத கடை மற்றும் தலைமுடி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.கடந்தாண்டு, தலைமுடிக்கு, 2.02 கோடி ரூபாயும், பிரசாத கடைக்கு, 1.56 கோடி ரூபாயும், ஆரம்ப கட்ட ஏல தொகையாக, கோவில் நிர்வாகம் நிர்ணயித்தது. தற்போது, ஏலத் தொகை அதிகம் என்பதால், ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை.இது குறித்து கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை ஆணையரின் அனுமதியோடு, அடுத்த மாதம், 6ம் தேதி மீண்டும் ஏலம் நடத்தப்படவுள்ளது' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை