அனுமதியற்ற பாரில் அதிகாரிகள், 'ரெய்டு'; 4 பெட்டி பீர், 300 மதுபாட்டில் பறிமுதல்; ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியற்ற பாரில் அதிகாரிகள், 'ரெய்டு'; 4 பெட்டி பீர், 300 மதுபாட்டில் பறிமுதல்; ஒருவர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவள்ளூர் : நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருவள்ளூர் கற்குழாய் தெருவில், அனுமதியின்றி செயல்பட்ட, 'குடி'மையத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தி, நான்கு பெட்டி பீர், 360 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், உரிமையாளரை தேடுகின்றனர். திருவள்ளூர் நகரில், ஒன்பது மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் செயல்பட்டு வந்த குடி மையங்கள் அனைத்தும், விலை அதிகம் எனக்கூறி, யாரும், 'டெண்டர்' எடுக்கவில்லை.ஆனால், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, கற்குழாய் தெருவில் உள்ள ஒரு குடிமையம் மட்டும், 24 மணி நேரமும் செயல்படுகிறது.பகல், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை, சட்டவிரோதமாக செயல்படுகிறது. இரவு, 10:00 முதல் பகல், 12:00 மணி வரை, மதுபானங்கள், 30 ரூபாய் வரை, கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.மதுவிற்கு அடிமையானோர், கூடுதல் விலை கொடுத்து, தரம் குறைந்த மதுபானங்களை அருந்தி, உடலை வருந்திக் கொள்கின்றனர். மேலும், ஆந்திர, கர்நாடக மாநில மதுபானங்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.இதில், வள்ளலார் தெருவில், சட்ட விரோதமாக செயல்பட்ட குடி மையத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, நான்கு பெட்டி பீர், 360 குவார்ட்டர் பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.விற்பனையாளரான, வள்ளலார் தெருவைச் சேர்ந்த, பாலாஜி, 47, என்பவரை கைது செய்தனர். குடி மைய உரிமையாளர் தினேஷ் என்பவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.மேலும், சட்டவிரோதமாக செயல்பட்ட குடிமையத்தை மூடவும், அங்கிருந்த பொருட்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X