நிலுவை தொகை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலுவை தொகை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவாலங்காடு : திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்குகிறது. இந்த ஆலைக்கு, 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், கரும்பு அனுப்புகின்றனர்.இந்த நிலையில், நடப்பாண்டில், கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு, 15 கோடி ரூபாய், ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்க+ வேண்டிய பங்கீட்டு தொகை, 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தற்போது, ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு, மொத்தம், 37 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.இந்த நிலுவை தொகையை வழங்க கோரி, திருவாலங்காட்டு சர்க்கரை ஆலை முன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில பொதுச் செயலர் ரவீந்திரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் துளசிநாராயணன் வரவேற்றார். மாவட்ட செயலர் பெருமாள் உட்பட, 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், ஆலை நிர்வாகத்தை எதிர்த்து கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, ஆலை நிர்வாகம் சார்பில், விவசாயிகளுடன் நடத்திய பேச்சும், தோல்வி அடைந்தது. நிலுவை தொகை வழங்கும் வரை, போராட்டம் தொடரும் என, விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தகவலறிந்ததும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி, டி.எஸ்.பி., சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.
விரைவில் பணம், 'பட்டுவாடா'ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் சாமுண்டீஸ்வரி, நேற்று மாலை அழைத்து, பேச்சு நடத்தினார்.வரும், 31ம் தேதிக்குள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, 14 கோடி ரூபாய் கரும்பு நிலுவை தொகை முழுவதும் வழங்கப்படும் என, உறுதி அளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை