போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு; 13 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு; 13 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

Added : மே 18, 2018
Advertisement

திருத்தணி : திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள, தனியார் பள்ளி வாகனங்களை, போக்குவரத்து துறை மற்றும் மேல்மட்ட குழு ஆய்வு செய்ததில், 13 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஆண்டுதோறும், மே மாதத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு செய்து, தகுதி சான்று வழங்கப்படுகிறது. அந்த வகையில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வாகனங்கள் ஆய்வு, திருத்தணி அரசு கலைக் கல்லுாரி எதிரே, நேற்று நடந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்பாஸ்கர், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மேல்மட்ட குழுவினர், வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி, டி.எஸ்.பி., சேகர் உட்பட, கல்வித்துறை அதிகாரிகள், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.அவசர கால வழி, போதிய இருக்கைகள், தீ தடுப்பு கருவி இயக்கம் உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன.முன்னதாக, பள்ளி வாகனங்களின் ஓட்டுனர், மேலாளர் மற்றும் உதவியாளர்களுக்கு, சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:பள்ளி வாகனங்கள் ஆய்வில், மொத்தம், 154 வாகனங்கள் பங்கேற்றன. இதில், 141 வாகனங்களுக்கு, அனைத்து ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் தகுதியாக இருந்ததால், அவற்றுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டன. 13 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.வரும், 23 ம் தேதி நடைபெற உள்ள தரஆய்வில், பல்வேறு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்ட, 13 வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து, பங்கேற்கலாம். மேலும், இதுவரை ஆய்வுக்கு வராத, 22 வாகனங்களும், அப்போது பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 31ம் தேதிக்குள் சான்றுதிருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பள்ளி வாகனங்கள், சாலையில் இயங்குவதற்கு தகுதி வாய்ந்ததா என்பது குறித்த ஆய்வு, நேற்று துவங்கியது. இதை, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளின்படி உள்ளதா என்பதை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம், 1,222 பள்ளி வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலரால் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று, 252 வாகனங்கள் திருவள்ளுரிலும், 176 வாகனங்கள் திருத்தணியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வாகனங்களை, போக்குவரத்து துறையின் அனுமதி இல்லாமல் சாலைகளில் இயக்க முடியாது. மீறி இயக்கினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வரும், 31ம் தேதிக்குள், பள்ளி வாகன வசதிகளை சரிசெய்து, தடையில்லா சான்று பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X