நிலத்தடி நீர் திருட்டு அதிகரிப்பு; அரசிடம் பொ.ப.துறை புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் திருட்டு அதிகரிப்பு; அரசிடம் பொ.ப.துறை புகார்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆளுங்கட்சியினர் ஆதரவுடன், நிலத்தடி நீர் திருடி விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக, அரசிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் புகார் செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, பயிர்களுக்கு பாசனம் செய்யப்படுகிறது.அனுமதி பெறவில்லைசிலர், நீர் விற்பனைக்காகவும், ஆழ்துளை குழாய்களை வர்த்தக ரீதியாக அமைத்துள்ளனர். ஆனால், இதற்கு அரசிடம், முறையான அனுமதி பெறவில்லை. இங்கு திருடப்படும் நிலத்தடி நீர், சென்னையில் உள்ள ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தேவைக்காக, விற்பனை செய்யப்படுகிறது.தற்போது, தேவை அதிகரித்துள்ளதால், ஒரு லாரி நிலத்தடி நீர், 2,500 ரூபாய் முதல், 4,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.பொதுப்பணித் துறையினர் நடத்திய ஆய்வில், மற்ற மாவட்டங்களை காட்டிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், நிலத்தடிநீர் திருட்டு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.இம்மாவட்டத்தில், மாதவரம், மணலி, கொசப்பூர், புழல், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நிலத்தடி நீர் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது.ஆளுங்கட்சியினர் ஆதரவுடன் இது நடப்பதால், அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை.இதே நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர்மட்டம், வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.வலியுறுத்தல்எனவே, இது குறித்து அரசிடம், பொதுப்பணித்துறையினர் புகார் செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மூலம், நிலத்தடி நீர் திருட்டை தடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை குடிநீர் வாரியம் மூலமும், இதே போன்ற புகார், அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், நிலத்தடி நீர் திருட்டை கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்படலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை