திருந்திய நெல் சாகுபடியில் அறுபதாம் குறுவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருந்திய நெல் சாகுபடியில் அறுபதாம் குறுவை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பொன்னேரி : சொர்ணவாரி பருவத்தில், பாரம்பரிய நெல் வகையான அறுபதாம் குறுவை ரகத்தை, திருந்திய நெல் சாகுபடி முறையில், விவசாயி ஒருவர் நடவு செய்துள்ளார்.மீஞ்சூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு, நடவுப்பணிகளை மேற்கொள்ள, விவசாயிகள் விளைநிலங்களை தயார் செய்து வருகின்றனர். ரூபாலி, டிகேஎம்3, டிகேஎம்9 ஆகிய நெல் ரகங்களை பயிரிட, நெல் விதைத்து, நாற்றுகளை வளர்க்கின்றனர்.இந்நிலையில், பாரம்பரிய நெல் ரகங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும், பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ராஜாஆறுமுகம், சொர்ணவாரி பருவத்திற்கு, அறுபதாம் குறுவையை நடவு செய்து வருகிறார். இயற்கை உரங்களை பயன்படுத்தி, பாரம்பரிய நெல் ரகங்களையே இவர் வளர்க்கிறார்.அறுபதாம் குறுவை நெல் ரகத்தை தற்போது, திருந்திய நெல் சாகுபடி முறையில், கயிறு பிடித்து, சீரான இடைவெளியில், நேர்த்தியான நடவுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.விவசாயி ராஜா ஆறுமுகம் கூறியதாவது:மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும், பழமையான அரிசி ரகங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், பாரம்பரிய நெல் ரகங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறேன்.சம்பா பருவத்தின் போது, ஆற்காடு கிச்சலி சம்பா பயிரிட்டேன். அவற்றை, நல்ல விலைக்கு விற்பனை செய்தேன். ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்து, சாணம், கோமியம், பஞ்சகாவியம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி, பயிர் செய்கிறேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் உற்பத்தி செய்வதால், அவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பாரம்பரிய நெல் ரகமான அறுபதாம் குறுவையை நடவு செய்து வருகிறேன். இது, ஒரு ஏக்கருக்கு, 20 முதல், 25 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். குறைந்த மகசூல் என்றாலும் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும். இந்த அரிசியில் கால்சியம் சத்துக்கள் அதிக உள்ளன.எந்த ரக பயிராக இருந்தாலும், விவசாயிகள் கூடுமானவரை ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை