பேருந்துகளில், 'ஏர் ஹாரன்'; காவல் துறையினர் நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேருந்துகளில், 'ஏர் ஹாரன்'; காவல் துறையினர் நடவடிக்கை தேவை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்களால், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அவற்றை பறிமுதல் செய்ய, காவல் துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துஉள்ளனர்.வேலுார் மாவட்டம், சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக, திருத்தணிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு, 100க்கும் மேற்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில், அதிக ஒலி எழுப்பக்கூடிய, காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதிர்ச்சியில் ஆழ்த்தும் இந்த காற்று ஒலிப்பான்களால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அருகே வரும், பேருந்து எழுப்பும் அதிக ஒலியால், அவர்கள் நிலை குலைந்து போகின்றனர். வாகனத்தை சீராக செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.மேலும், ஊருக்குள் நுழையும் பேருந்துகளும் அதிக ஒலி எழுப்புவதால், சாலையை ஒட்டி குடியிருப்பவர்கள் ஒலி மாசு காரணமாக அதிருப்தி அடைந்துள்ளனர்.காவல் துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, அதிக ஒலி ஏற்படுத்தும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை