போலீஸ் காவல் முடிந்து  ரவுடிக்கு மீண்டும் சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் காவல் முடிந்து  ரவுடிக்கு மீண்டும் சிறை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : பல வழக்குகளில் தொடர்புடைய, ரவுடி தியாகுவிடம், போலீஸ் காவல் விசாரணை முடிந்து, நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த ரவுடி தியாகு மீது கொலை, கொலை மிரட்டல் அடிதடி என, 36க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல முறை சிறைக்கு சென்று வந்ததால், ரவுடி தொழிலை விட முடியாமல் தலைமறைவாக இருந்தான். இந்நிலையில், கடந்த மாதம் வேலுார் மாவட்டம் திருப்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜரானான். காஞ்சி தாலுகா போலீசார் அவனை, இரண்டு நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரித்தனர்.நீதிமன்றத்தில் கஸ்டடி எடுத்து அவனை விசாரிக்கும் போது, நீதிபதியிடம், என்னை போலீசார் துன்புறுத்துவர்; கஸ்டடி வழங்க வேண்டாம் என, கூறியுள்ளான்.மேலும், போலீசாருக்கும் அவனுக்கும் உள்ள நெருக்கத்தை, மொபைல் போன் மூலம் பேசிய உரையாடலை, 'வாட்ஸ் ஆப்' மூலம் வெளியிட்டது தானே என, அவன் ஒப்புக்கொண்டதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர்.விசாரணை முடிந்து, நேற்று மீண்டும் வேலுார் சிறையில் அவனை அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை