பள்ளி வாகனங்களில் வசதி; போக்குவரத்து அதிகாரி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்களில் வசதி; போக்குவரத்து அதிகாரி ஆய்வு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவது குறித்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். விதிமுறைகளை பின்பற்றாத, 15 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள், அரசின் விதிகளை கடைப்பிடித்து பராமரிக்கப்படுகின்றனவா என, ஆண்டு தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.அந்த வகையில் நேற்று, 174 பள்ளி வாகனங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், வட்டார போக்குவரத்து அலுவலர், செந்தில்குமார், வாகன ஆய்வாளர்கள், சிவகுமார், செங்கோட்டுவேல் ஆய்வு செய்தனர்.இதில், 15 பள்ளி வாகனங்கள் அரசின் விதிகளை பின்பற்றவில்லை. அதனால் அந்த வாகனங்கள், திருப்பி அனுப்பப்பட்டன.இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர், செந்தில்குமார் கூறுகையில், ''பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான வசதிகள், முறையாக பின்பற்ற வேண்டும். ''இதில் ஏதாவது குறை இருந்தால் அந்த வாகனங்களை இயக்க அனுமதிப்பதில்லை. மீண்டும் அந்த குறையை சரிசெய்து எங்களிடம் காட்டி, இயக்க அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X