ஆத்தூரில் பள்ளி மாணவி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் பள்ளி மாணவி பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்துார் : ஆத்துாரில், விளையாடிய போது துப்பட்டா கழுத்தில் இறுக்கியதில், பள்ளி மாணவி இறந்தார்.செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த, செந்தில்குமார் என்பவரின் மகள் மித்ரா, 11. அதே பகுதியில் உள்ள பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில், ஊஞ்சல் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, துப்பட்டா கழுத்தில் இறுக்கியதில் மயக்கம் அடைந்தார். அருகிலிருந்த உறவினர்கள், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து, அந்த சிறுமியின் தந்தை செந்தில்குமார் அளித்த புகாரை, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை