அரசு பேருந்து மோதி கூலி தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பேருந்து மோதி கூலி தொழிலாளி பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கருக்குப்பேட்டை : அரசு பேருந்து மோதியதில், கூலித்தொழிலாளி இறந்தார்.வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த, முனுசாமி என்பவர் மகன் சின்னத்தம்பி, 40; கூலித்தொழிலாளி. தன் உறவினர் ஒருவரின், 'ஹோண்டா ஷைன்' இரு சக்கர வாகனத்தில், அய்யன்பேட்டை கிராமத்திலிருந்து, வாலாஜாபாத் நோக்கி சென்றார்.அதே வழித்தடத்தில், வேலுாரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது, மோதியதாக கூறப்படுகிறது.இதில், அரசு பேருந்து பின்புற சக்கரத்தில், சின்னத்தம்பி சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடினார்.இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்த, சின்னத்தம்பியின் உறவினர்கள், விபத்து நடந்த பகுதியில், கதறி அழுதனர். இதனால், காஞ்சிபுரம்- - வாலாஜாபாத் சாலையில், கருக்குப்பேட்டை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவலறிந்து வந்த வாலாஜாபாத் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.இதுகுறித்து, உறவினர்கள் கூறியதாவது: செங்கல் அறுவடை செய்து கொண்டிருந்தார். கடைக்கு செல்கிறேன் என கூறி, வந்தவர், விபத்தில் சிக்கி இறப்பார் என, தெரியாமல் போய் விட்டது. ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோமே. அவர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை