ஊரப்பாக்கத்தில் துணிகரம்; ரூ.1 லட்சம் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரப்பாக்கத்தில் துணிகரம்; ரூ.1 லட்சம் கொள்ளை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊரப்பாக்கம் : ஊரப்பாக்கத்தில், இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து, ஒரு லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.வண்டலுார் அடுத்த, மண்ணிவாக்கம் விரிவு அண்ணாநகரைச் சேர்ந்தவர், ரமேஷ், 27. இவர், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில், ஊரப்பாக்கம் தனியார் வங்கிக்கு, நேற்று காலை, 11:30 மணிக்கு சென்றார்.அதன் பின், வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுத்து, வங்கி வெளியே நிறுத்தியிருந்த, டி.வி.எஸ்., 50' வாகனத்தின் பெட்டியில், பணத்தை வைத்தார். அதன் பின், அருகில் உள்ள கடைக்கு, ஜெராக்ஸ் எடுக்கச்சென்றார்.இதை பார்த்த மர்ம நபர்கள், வாகனத்தின் பெட்டியை உடைத்து, அதிலிருந்த, ஒரு லட்சம் ரூபாயை, கொள்ளையடித்து சென்றனர். பணத்தை பறிகொடுத்த நபர், போலீசில் புகார் அளித்தார்.வங்கிகள் அருகே நடமாடும் மர்ம நபர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை