திருநங்கையிடம் நள்ளிரவில் அத்துமீறல்; மதுராந்தகத்தில் 3 ரவுடிகள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருநங்கையிடம் நள்ளிரவில் அத்துமீறல்; மதுராந்தகத்தில் 3 ரவுடிகள் கைது

Added : மே 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, நள்ளிரவில் திருநங்கையைத் தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.புக்கத்துறையை அடுத்த நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த, திருநங்கை வைஷ்ணவி, 32. இவர் நேற்று முன்தினம் இரவு, மேல்மலையனுார் கோவிலுக்கு சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது.மேலவளம்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி, நடந்து சென்று கொண்டிருந்தவரை, 'டாடா இண்டிகா' காரில் வந்த மூவர் கத்தியைக் காட்டி மிரட்டி, பலாத்காரம் செய்து, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளனர்.அப்போது, அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சத்தம் கேட்டு அங்கு சென்றனர். போலீஸ் வாகனத்தைப் பார்த்து, கொள்ளையர்களில் இருவர் தப்பியோடினார். சிக்கிய ஒருவனையும் காரையும் மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். சற்று நேரத்தில், அந்த பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.விசாரணையில், அந்த மூவரும், விக்னேஷ், 22, சபரி, 22, தீபக், 21, என்பதும், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் காரிலிருந்து கத்திகளும் கைப்பற்றப்பட்டன. மூவரையும் கைது செய்த போலீசார் சிறைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-மே-201805:06:03 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சிறையிலே அடைத்தனர் என்று சொல்லுங்க சீ திருநங்கைகளையுமா இதுகள் கேடு செய்வானுக வயசும் இவ்ளோதான் அவ்ளோ வெறிநாய்களா இருக்காங்களே வெளியே விடாதீங்கப்பால் பொண்ணுகளுக்கு ஆபத்தாயிருப்பானுக , இதுபோன்றவர்களுக்கு திருந்தவளி கம்பலா ஆர்மிலே சேர்க்கவேண்டும் ஆரமிலே இருந்தால்தான் டிசிப்ளின் வரும் செய்துதான் பாருங்களேன் ப்ளீஸ் 25வயசுக்குள்ள தப்பு பின்னால் அவள் கட்டாயம் ராணுவ வேலைக்கு அனுப்பனு ம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X