நாற்று கூலி குறைவு தொழிலாளர் புலம்பல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாற்று கூலி குறைவு தொழிலாளர் புலம்பல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்திரமேரூர் : நாற்று எடுக்கும் பணியில், குறைந்த அளவே கூலி வழங்கப்படுவதாக, அத்தொழிலில் ஈடுபடும் கூலி தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.சம்பா பருவத்திற்கான சாகுபடி செய்த நெல் பயிர்கள் அறுவடையானதை தொடர்ந்து, தற்போது கிராம பகுதிகளில் சொர்ண வாரி பருவ சாகுபடி துவங்கப்பட்டுள்ளது.இதற்கென நாற்றெடுத்தல் மற்றும் நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாற்று எடுத்து, அதனை முடிச்சாக கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, நுாறு முடிச்சுக்கு, 150 ரூபாய் வீதம் கூலியாக வழங்கப்படுகிறது. இது போதுமான ஊதியம் இல்லை என, அத்தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.

சம்பா பருவ சாகுபடி நேரத்தில், நீர் நிலைகள் மழையால் நிரம்பி அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், சொர்ண வாரி பருவத்தின் போது கோடைக்காலம் என்பதால், அந்த சமயங்களில், 9:00 மணிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கும். கடும் வெயிலிலும் தொடர்ந்து நாற்று எடுத்து, நடவுக்கு தயார் செய்கிறோம். எனவே, இது போன்ற சமயங்களில், நில உரிமையாளர்கள், கூலியை உயர்த்தி வழங்கினால், திருப்தியாக இருக்கும்.கந்தசாமி, அரும்புலியூர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை